அத்தியாவசிய உணவு பொருட்கள் பலவற்றின் விலை திடீரென பாரியளவு அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய சிவப்பு பருப்பு ஒரு கிலோ கிராம் 250 ரூபாயிலும், சீனி ஒரு கிலோ கிராம் 220 ரூபாயினும், இலங்கை கிழங்கு ஒரு கிலோ கிராம் 300 ரூபாயிலும், இந்திய கிழங்கு ஒரு கிலோ கிராம் 240 ரூபாயிலும், இலங்கை வெங்காயம் ஒரு கிலோ கிராம் 135 ரூபாயிலும் சிவப்பு வெங்காயம் ஒரு கிலோ கிராம் 400 வரையிலும் அதிகரித்துள்ளது.
மொத்த விற்பனை விலை உயர்வு காரணமாக பருப்பு, சீனி, கிழக்கு, வெங்காயம், நெத்தலி மற்றும் கருவாடு ஆகிய அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளதாக சில்லறை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
சதொசயில் சிவப்பு பருப்பு ஒரு கிலோ கிராம் 250 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. எதிர்வரும் நாட்களில் ஒரு தொகை சீனி கிடைக்கவுள்ளதாகவும் அதன் பின்னர் ஒரளவு விலை குறையும் என எதிர்பார்ப்பதாக சதொச தலைவர் ஓய்வு பெற்ற ரியர் அத்மிரால் ஆனந்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.