மத்திய பிரதேசததில் மனைவி மீது ஏற்பட்ட கணவர், மனைவியின் அந்தரங்க பகுதியை தைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் சிங்க்ராலி மாவட்டத்தில் உள்ள மடா கிராமத்தில் தனது 35 வயது மனைவியோடு, 55 வயதான நபர் வசித்து வந்துள்ளார்.
மனைவி மீது சந்தேகம் ஏற்பட்ட நிலையில், வேறு யாருடனாவது கள்ள தொடர்பில் இருப்பதாக கூறி மனைவியை அடித்து உதைத்துள்ளார்.
குறித்த மனைவி தான் எந்த தவறும் செய்யவில்லை என்று கதறியும் விடாத கணவர், அவரது பிறப்புறுப்பினை உலோக ஊசியினால் தைத்து அறைக்குள் போட்டு கொடுமை செய்துள்ளார்.
பின்பு குறித்த பெண் அவரிடமிருந்து தப்பித்து அங்கிருந்த காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளநிலையில் பொலிசார் அந்நபரை தேடி வருகின்றனர். மேலும் கொடுமைப்படுத்த பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.