இலங்கைக்கு சீன அரசாங்கம் அவ்வப்போது தங்களது உதவிகளை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையர்களுக்கு கஷ்டங்கள் ஏற்படும் சகல சந்தர்பங்களிலும் சீன மக்கள் தங்கள் ஆதரவு கரங்களை நீட்ட ஒருபோதும் தயங்க மாட்டார்கள். சீன இராணுவத்தினால் வழங்கப்படும் இந்த தடுப்பூசி தொகுதிகள் கொவிட்-19 தொற்றுநோயை ஒற்றுமையின் மூலம் எதிர்த்துப் போராடுவதற்கு வழங்கப்பட்டதாகும் என்று கொழும்பிலுள்ள சீன தூதரகத்தின் பாதுகாப்பு இணைப்பாளர் சிரேஷ்ட கேர்ணல் டோங் தெரிவித்தார்.
இலங்கை பாதுகாப்பு படையினருக்காக சீன மக்கள் குடியரசின் தேசிய பாதுகாப்பு அமைச்சினால் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ள மூன்று இலட்சம் சைனோபார்ம் தடுப்பூசிகள் இன்று சனிக்கிழமை நாட்டை வந்தடைந்தன. குறித்த தடுப்பூசிகளை இலங்கைக்கான சீன தூதகரத்தின் பாதுகாப்பு இணைப்பாளர் சிரேஷ்ட கேர்ணல் வான் டோங், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவிடம் (ஓய்வு) உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
இவ்வாறு தடுப்பூசிகளைக் கையளிக்கும் நிகழ்வின் போதே சீன தூதரக பாதுகாப்பு இணைப்பாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.