கனடாவின் Scarborough பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஒரு உணவகம்தான் Ruchi Take-Out and Catering. இது 3580 McNicoll Avenueவில் அமைந்துள்ளது. இந்த குறிப்பிட்ட உணவகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு உணவு என்ற அது ஆப்பம் தான்…
ஆப்பம் என்பது இலங்கையிலும் தென்னிந்தியாவிலும் பிரசித்தி பெற்ற ஒரு உணவு என்பதை பலரும் அறிந்திருந்த ஒன்று. ஆக, இலங்கையர்களானாலும் சரி, தென்னிந்தியர்களானாலும் சரி, வீட்டு சாப்பாடு நினைவுக்கு வந்தால் இந்த உணவகத்துக்குச் செல்லலாம்.
காலை சிற்றுண்டியானாலும் சரி, இரவு உணவானாலும் சரி, ஆப்பம் கோழிக்கறி அல்லது ஆட்டுக்கறி, முட்டையை உடைத்து ஊற்றி தயாரிக்கப்பட்ட ஆப்பம், தேங்காய்ப்பாலுடன் ஆப்பம் என பல வகையில் ஆப்பத்தை சுவைக்கலாம். பல இடங்களில் ஆப்பம் கிடைக்கும் என்றாலும், அவை முன்கூட்டியே தயாரிக்கப்பட்டு கண்டெய்னர்களில் சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கும்.
ஆகவே அவை வழக்கமான ஆப்பத்தைப்போல் இல்லாமல் தட்டையாக இருக்கும். ஆனால் இந்த கடையில் அவ்வப்போது சுடச்சுட ஆப்பம் தயாரித்துக்கொடுக்கப்படுவதால், அவை நடுவில் மென்மையாகவும், ஒரங்களில் மொறுமொறுப்பாகவும் இருக்கும். உங்களுக்கு விரும்பிய கறியுடன் அதை உண்ணலாம் என்கிறார் இந்த உணவகத்தில் சாப்பிட்ட சமூக ஊடகப் பிரபலம் ஒருவர்.