நாட்டில் இன்று கட்டுக்கு அடங்காத வகையில் வாகனங்களில் விலை உயர்ந்துள்ளதாகவும், மாஃபியா மோசடியாளர்களின் செயற்பாடுகள் காரணமாகவே இவ்வாறு விலை உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாலபே பகுதியை சேர்ந்த கார் விற்பனை நிலையம் ஒன்றின் உரிமையாளர் இதனை தெரிவித்துள்ளார். இணைய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை கூறியுள்ளார்.
வாகனங்களின் விலை அதிகரிப்பு செயற்கையானது எனவும் அது ஒரு வகையான மாஃபியா குழுவின் செயற்பாடு என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
சாதாரண வாகனங்களின் விலையில் பெரும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதுபோன்ற நியாயமற்ற விலையில் வாகனங்களை வாங்க வேண்டாம் என்றும் அவர் மக்களை கோரியுள்ளார்.
மிகக் குறைந்த விலையில் கொண்டுவரப்பட்ட வாகனங்களை மறைத்து வைத்து எதிர்காலத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.