சியோமி நிறுவனம் உருவாக்கி வரும் புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.
சாம்சங் நிறுவனம் கடந்த வாரம் உலகின் முதல் 200 எம்பி கேமரா சென்சாரை அறிமுகம் செய்தது. இந்த சென்சாரை ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு வழங்கும் பணிகள் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் சாம்சங்கின் புதிய 200 எம்பி கேமரா சென்சார் கொண்ட முதல் ஸ்மார்ட்போனினை சியோமி வெளியிடலாம் என கூறப்படுகிறது. சியோமியின் எம் 11 சீரிஸ் ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் அடுத்த ஆண்டு அறிமுகமாகிறது.
இந்த ஸ்மார்ட்போன்கள் சியோமி 12 சீரிஸ் என அழைக்கப்பட இருக்கின்றன. சியோமி 12 சீரிசில் ஒரு மாடல் 200 எம்பி பிரைமரி கேமரா கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் 50 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் வழங்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.