ரஷிய அதிபர் புதினுக்கு நெருக்கமானவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், புதின் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட போதிலும், வைரஸ் உருமாற்றம் அடைந்து வீரியம் இழக்காமல் உள்ளது. கீழ்மட்ட மக்கள் முதல் நாட்டின் அதிபர் வரை யாராக இருந்தாலும் பயந்து ஓட வேண்டிய நிலை உள்ளது.
ஒருவருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டால் அவருடன் தொடர்பில் இருப்பவர்கள் குறிப்பிட்ட நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
அந்த வகையில் ரஷிய அதிபர் புதினுக்கு நெருக்கமானவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், புதின் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷியாவில் 71 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1.9 லட்சம் பேர் உயிரழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.