கோவிட் பரவல் காரணமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்ட நேரத்தில் வவுனியா மதுபானசாலைகளின் முன்னால் அதிகளவிலான மதுப்பிரியர்கள் குவிந்த நிலையில் சுகாதாரப் பிரிவினரும், பொலிஸாரும் இணைந்து 13 பேரைக் கைது செய்துள்ளனர்.
நாடு பூராகவும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டமானது எதிர்வரும் முதலாம் திகதி அதிகாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ள நிலையில் மதுபான சலைகளைத் திறப்பதற்கு மது வரித் திணைக்களம் அனுமதி வழங்கியதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இதனால் வவுனியா நகரின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள மதுபான சாலைகள் முன்பாக அதிகளவிலான மதுப் பிரியர்கள் திரண்டிருந்தனர்.
அத்துடன் நகரின் கண்டி வீதியில் அமைந்திருந்த மதுபானசாலை ஒன்று திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்றது.


















