தாயகத்தின் சிறந்த தோல் வாத்திய கலைஞரும்,ஈழத்தில் உருவான அத்தனை பாடல்களுக்கும் தபேலா வாத்தியத்தை இசைத்தவருமான ‘திரு சதாசிவம் வேல்மாறன்” இன்று உயிரிழந்தார்.
இந்த நிலையில் அவரது இறப்பை தாங்காத உற்றார்,உறவினர் மற்றும் பொதுமக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். இந்த சூழலில் ஈழத்து கலைஞர்கள் சார்பில் இரங்கல் அறிக்கை வெளியிடப்பட்டது.அதில்,
எங்களையெல்லாம் தவிக்க வைத்துவிட்டு இறைவனடி சேர்ந்த அன்னாரது ஆத்மா சாந்திக்காக பிரார்த்திக்கிறோம். மேலும் ஈழத்து கலைஞர்கள் சார்பில் அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றோம்



















