குமட்டல், வாந்தி போன்ற அஜீரணக் கோளாறுகளுக்கு நல்ல மருந்தாக இஞ்சி உள்ளது. அஜீரணக் கோளாறுடன் தொடர்புடைய தலைசுற்றல், மயக்கம் ஆகியவையும் குறைகிறது.
தேவையான பொருட்கள்
இஞ்சி – 1 பெரிய துண்டு
பூண்டு – 4 பல்
பச்சை மிளகாய் – 1
சின்ன வெங்காயம் – 5
காய்ந்த மிளகாய் – 2
மிளகு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
தக்காளி – 1
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிதளவு
பெருங்காயத்தூள் – சிறிதளவு
சீரகம், கறிவேப்பிலை – தாளிப்பதற்கு
செய்முறை
இஞ்சியை தோல் நீக்கி வைக்கவும்.
காய்ந்த மிளகாயை சுட்டு வைக்கவும்.
சின்ன உரலில் இஞ்சி, ப.மிளகாய், பூண்டு, சுட்ட மிளகாய், மிளகு, சீரகம், சின்னவெங்காயம், தக்காளி, சேர்த்து அரைத்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கறிவேப்பிலை, சீரகம், பெருங்காயம் சேர்த்து தாளித்த பின்னர் அரைத்த கலவை சேர்த்து வதங்கவும்.
இந்த கலவை சற்று வதங்கியதும் உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
கடைசியாக கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கி பரிமாறவும்.
சுவையான இஞ்சி சூப் தயார்.



















