யாழ். வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியில் மின்னல் தாக்கி உயிரிழந்த நபருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த நபர் நேற்று முன்தினம் கடற்றொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்.
இதேவேளை மற்றையவர் மயக்கமுற்ற நிலையில் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
மேலும், மின்னல் தாக்கி உயிரிழந்தவர் 35 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தை என தெரியவந்துள்ளது.