நாட்டில் வெள்ளை சீனியின் இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நாட்டில் வெள்ளை சீனியின் இறக்குமதிக்கு நாயகம் தமயந்தி கருணாரத்ன அவர்கள் அனுமதி வழங்கினார். மேலும் இவர் தான் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டுப்பாட்டாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதன்படி இன்று முதல் வெள்ளை சீனியை நாட்டில் இறக்குமதி செய்யலாம் என அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நாட்டில் டொலர் தொடர்பான நெருக்கடி நிலவி வருவதால் வெள்ளை சீனியின் இறக்குமதிக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதிப்பத்திரங்ளை தற்காலிகமாக இரத்துசெய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.



















