பிரான்ஸில் கடந்த 24 மணித்தியாலத்தில் 1,138 பேருக்கு covid-19 தொற்று உறுதிசெய்யப்பட்டதோடு 50 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரான்ஸில் இதுவரை மொத்தமாக 70இலட்சத்து 28 ஆயிரத்து 197 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, 1 இலட்சத்து 16ஆயிரத்து 848 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு 1 இலட்சத்து 10ஆயிரத்து 687 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் 1,355 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் 10ஆயிரத்து 318 பேர் குணமடைந்துள்ள நிலையில் இதுவரை Covid-19 தொற்றிலிருந்து மொத்தமாக, 68இலட்சத்து 662 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.