கிளிநொச்சி – கிலாலி பகுதியில் மிக நீண்ட காலமாக இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையமொன்று அழிக்கப்பட்டுள்ளது.
குறித்த கசிப்பு உற்பத்தி நிலையமானது நேற்று முன்தினம் சாவகச்சேரி மதுவரி திணைக்களத்தினரால் முழுமையாக அழிக்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த கசிப்பு உற்பத்தி நிலையமானது மிக நீண்ட காலமாக இயங்கி வருவதற்கான சான்றுகள் காணப்படுவதாக மதுவரி திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படாத நிலையில் 11 பெரல் கோடாவும், உற்பத்தி உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக மதுவரி திணைக்களத்தினரும், இராணுவத்தினரும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.