வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பொன்னாலை பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து கூரிய ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொன்னாலை பகுதியில் கூரிய ஆயுதங்களைக் கையிருப்பில் வைத்திருப்பதாக பொலிஸ் விசேட அதிரடிப்படைக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் வீடு ஒன்று பொலிஸ் விசேட அதிரடிப்படையால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
இதன்போது ஆயுதங்களை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 25 வயது இளைஞர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் மீட்கப்பட்ட ஆயுதங்களுடன் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கையளிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.