இலங்கைக்கு வரும் விமானத்தில் அனுமதிக்கப்பட்ட பயணிகளின் எண்ணிக்கைக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது.
ஒக்டோபர் 7 ஆம் திகதி முதல் இந்த உத்தரவு அமலுக்கு வந்ததாக சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.
கொரோனா பரவலையடுத்து, ஒரு விமானத்தில் அதிகபட்சமாக 75 பயணிகள் மட்டமே அனுமதிக்கப்படுவார்கள் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. தற்போது அந்த கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது.
எனினும், முழுமையான தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் மட்டும் பிசிஆர் சோதனையின் பின் நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவார்கள். தடுப்பூசி பெறாத பயணிகள் 14 நாட்களுக்கு கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.


















