பருத்தித்துறை கற்கோவளம் புனித நகரில் நேற்று இரவிரவாக வாள்வெட்டு, மூவர் வைத்தியசாலையில் அனுமதி, மூவர் போலீசாரால் கைது.
நேற்று பிற்பகல் இரண்டு மணியிலிருந்து இரவிராவாக வாள்வெட்டுக் குழுக்களால் பருத்தித்துறை புனிதநகர் பகுதியில் இடம் பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் மூவர் வெட்டுக் காயங்களுக்குள்ளாகி பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஐந்து வீடுகள் சேதமாக்கப்பட்டுள்ளன. பல இலட்சம் பெறுமதியான சொத்துக்களும் நாசம் செய்யப்பட்டுள்ளது.
நேற்று பிற்பகல் கற்கோவளம் புனிதநகர் பகுதியில் போதையில் ஒரு சிலர் சண்டித்தனத்தில் ஈடுபட்டதாகவும் இதனால் அப்பகுதியில் உள்ள ஒருசிலர் குறித்த நபர்களை தமது வீட்டிற்கு முன்னால் நின்று சத்தம் போட வேண்டாம் என்று தெரிவித்ததை அடுத்து குறித்த நபர்கள் பிற இடங்களில் இருந்து வாள் வெட்டு குழுக்களை அழைத்து வீடுகள், கதவுகள், கார்கள், உந்துருளிகள் மீது தாக்குதல் நடத்தினார்கள். இதில் ஐந்து வீடுகளும் சேதமாக்கப்பட்டுள்ளன.
பருத்தித்துறை பொலிசாருடன் மேலதிகமாக நெல்லியடி பொலிசாரும் கடமைக்கு அழைக்கப்பட்டனர். இராணுவத்தினரும் அழைக்கப்பட்டனர்.
பின்னர் நிலைமை கட்டுப்படுத்தப்பட்டது.
இதுவரை பருத்தித்துறை போலீசாரால் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர், தொடர்ந்தும் பருத்தித்துறை போலீசார் பாதுகாப்பு கடமையில் அப்பகுதியில் உள்ளனர்.
இதேவேள் தமது கிராமத்தில் கஞ்சா, கள்ளமண், கசிப்பு உட்பட்ட சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுபவர்களே இவ்வாறு வாள் வெட்டிலும் சண்டித்தனத்திலும் ஈடுபடுவதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்
நேற்றைய தினம் வாள் வெட்டுக் குழுக்கள் வந்தபோது தாம் ஓடி ஒளிந்தே, தம்மை காப்பாற்றி கொண்டதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.