இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பிரபல பங்கு வர்த்தகரும்- தொழில் அதிபருமான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா முன் கைகட்டி நிற்கும் புகைப்படம் பல கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
மோடி மிகவும் தன்மையானவர் என பாஜகவினர் புகழ்ந்தாலும், மற்ற கட்சியினர்கள், அரசியல் விமர்சகர்களை இதை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் யார் அந்த தொழிலதிபர், மோடி சந்திப்புக்கு பின் நடந்தது என்ன என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
அக்டோபர் 5ம் தேதி பிரதமர் மோடியும், ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் சந்திப்பு நடந்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள ராகேஷ் ஜுன்ஜுன்வாலா சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டே வேலைகளை கவனித்து வந்துள்ளார்.
அத்துடன் கொரோனாவாலும் பாதிக்கப்பட்டிருந்ததால் அவர் உடல்நிலையை கருத்தில் கொண்டு மோடி நின்று கொண்டே பேசியுள்ளார்.
ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவை பிரத்யேகமான ஷூ அணிந்திருந்ததை பார்த்தவுடன், எழுந்திருக்க வேண்டாம் என பிரதமர் மோடி கூறியதாக தெரிகிறது.
அதன்பின்னர், சக்கர நாற்காலியில் இருந்து எழுந்து மோடியுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டாராம்.
யார் இந்த ராகேஷ் ஜுன்ஜுன்வாலா?
இந்திய பங்குச்சந்தை உலகில் வாரென் பஃப்பெட் என்ற செல்லப் பெயருடன் அழைக்கப்படுபவர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா.
ஆம்டெக் நிறுவனம், ஹங்காமா டிஜிட்டல் மீடியா என்டர்டெயின்மென்ட் ஆகியவற்றின் தலைவராகவும்,
பிரைம் ஃபோகஸ், ஜியோஜித் ஃபைனான்ஷியல் சர்வீஸ், பிராஜ் இண்டஸ்ட்ரீஸ், ப்ரொவோக் இந்தியா நிறுவனம், கான்கார்ட் பயோடெக் நிறுவனம், இன்னோவாசிந்த் டெக்னாலஜீஸ், மிட் டே மல்டிமீடியா, நாகார்ஜுனா கன்ஸ்ட்ரக்ஷன்ஸ், வைஸ்ராய் ஹோட்டல்ஸ், டாப்ஸ் செக்யூரிட்டி ஆகிய நிறுவனங்களின் வாரிய இயக்குநராகவும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா இருக்கிறார்.
தற்போது இவரது சொத்து மதிப்பு 5.7 பில்லியன் டாலர்கள் இருக்கலாம் என்று மதிப்பிடப்படுகிறது.
இதற்கிடையே மோடி சந்திப்புக்கு பின்னர், பங்குசந்தையில் இவரது நிறுவனத்தின் பங்குகள், பாரிய அளவில் உயர்ந்து வெறும் பத்தே நிமிடத்தில் ₹914 கோடிகள் உயர்ந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.