2022ம் ஆண்டின் ஆரம்பத்தில் புதிய காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை நிர்மாணப்பணிகள் ஆரம்பமாகவுள்ளன.
இலங்கை சிமெந்து கூட்டுத்தாபனத்தின் தலைவர் காமினி ஏக்கநாயக்க (Gamini Ekanayake) இதனை தெரிவித்துள்ளார்.
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் 725 ஏக்கர் நிலத்தை அங்கீகரிக்கவும், இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ள 185 ஏக்கர் நிலத்தில் இருந்து அவர்கள் விலகிச் செல்ல அழைப்பு விடுத்தும் தாக்கல் செய்யப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை ஏற்கனவே ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த ஆண்டு பெப்ரவரி 8ம் திகதி அமைச்சரவை பத்திரத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்ட பிறகு, 100 க்கும் பழைய இயந்திரங்களை அகற்றும் பணிகள் ஆரம்பித்துள்ளன. அதிகாரப்பூர்வமாக அந்த இடததில் இருந்து விலகிச் செல்லுமாறு இராணுவத்திடம் கூறவில்லை.
என்றாலும், 2022 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் வளாகத்தில் புதிய கே.கே.எஸ் சீமெந்து தொழிற்சாலை கட்டப்படும் போது அவர்கள் அங்கிருந்து வெளியேவார்கள் என்று இலங்கை சிமெந்து கூட்டுத்தாபனத்தின் தலைவர் காமினி ஏக்கநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா சிமென்ட் நிறுவனம் ஆகிய இரண்டிற்கும் சொந்தமான வளாகங்கள் இராணுவத்தின் ஆதரவுடன் தற்போது அகற்றப்பட்டு வருகின்றன.
1950 களில் நிறுவப்பட்ட கே.கே.எஸ் சிலோன் சிமெண்ட் கூட்டுத்தாபனம் இலங்கைக்கு பெரும் வருவாயை ஈட்டித்தந்த தொழிற்சாலையாக விளங்கியமை குறிப்பிடத்தக்கது.