கன்னட படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தவர் ஷங்கர் ராவ்(84) இன்று பெங்களூரில் உடல்நிலை சரியில்லாமல் காலமானார்.
காமெடி கதாபாத்திரங்களில் நடித்து நம்மை எல்லாம் சிரிக்க வைத்தவர் இன்று உயிருடன் இல்லையே என்று ரசிகர்கள் கவலை அடைந்திருக்கிறார்கள். Silli Lalli என்கிற காமெடி சீரியலில் பாஸ் பலராஜுவாக நடித்திருந்தார் ஷங்கர் ராவ். அந்த சீரியல் அனைத்து வயதினரையும் கவர்ந்தது.
ஷங்கர் ராவ் நடித்த மேலும் ஒரு சீரியலான Papa Pandu சூப்பர் ஹிட்டானது. அவர் தொலைக்காட்சி தொடர்கள் தவிர்த்து பல படங்களில் நடித்திருக்கிறார்.
கன்னட திரையுலகில் சீனியர் நடிகர்கள் அடுத்தடுத்து மரணம் அடைந்திருப்பது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஷங்கர் ராவின் மரண செய்தி அறிந்த பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். மேலும் அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளனர்.