நாடு முழுவதிலும் மேலும் சில அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு தொடர்கிறதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி சீனி, பால்மா மற்றும் சீமெந்து ஆகியவற்றுக்கான தட்டுப்பாடு நாட்டில் தலைவிரித்தாடுவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பொருட்களுக்கான விலைகள் அதிகரிக்கப்பட்டிருந்த நிலையில் மக்கள் பெரும் நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ளனர்.
இவ்வாறான நிலையில் , சிவப்பு சீனிக்கான தட்டுப்பாடு சதொச நிலையங்களில் ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது.