சமீபத்தில் திருமணம் செய்துக் கொண்ட பாடலாசிரியர் சினேகனை அழைத்து பரிசு கொடுத்து இருக்கிறார் இசையமைப்பாளர் இளையராஜா.
தமிழ் திரையுலகில் முன்னணி பாடலாசிரியராக வலம் வருபவர் சினேகன். இவர் தனது நீண்ட நாள் காதலியான, நடிகை கன்னிகா ரவியை ஜூலை மாதம் திருமணம் செய்து கொண்டார். சினேகனின் திருமணத்தை நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் நடத்தி வைத்தார்.
சினேகன் – கன்னிகா திருமணத்திற்கு திரையுலகினர் பலரும் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர். மேலும் ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளம் வாயிலாக வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்நிலையில் இசையமைப்பாளர் இளையராஜா, சினேகனையும் அவரது மனைவி கன்னிகாவையும் தனது ஸ்டுடியோவிற்கு அழைத்து வாழ்த்தி இருக்கிறார். அதோடு சினேகனுக்கு சிறப்பு பரிசாக மோதிரம் ஒன்றை பரிசளித்து இருக்கிறார்.