2020 க.பொ.த உயர் தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளிகள் (Z-score cutoff marks) இந்த வாரம் வெளியிடப்படும் என்று இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வெட்டுப்புள்ளிகளை இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.ugc.ac.lk இல் வெளியிடப்படும்.
நாட்டில் தீவிரமடைந்த கோவிட் தொற்று காரணமாக வெட்டுப்புள்ளிகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டிருந்தது.
இதற்கிடையில் க.பொ.த உயர்தரப் பரீட்சை 2020 ஆம் ஆண்டுக்கான பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு பல்கலைக்கழக நுழைவுக்கான மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளி விபரங்கள் வெளிடப்பட்டுள்ளன.
இதற்கமைய,புதிய மற்றும் பழைய பாடத்திட்டங்களுக்கமைய பரீட்சைகளில் தோற்றியவர்கள் இதனுள் அடங்குவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.