மாத்தறை – வெலிகம, கப்பரதொட்ட, அவரியாவத்தை பகுதியிலுள்ள சுற்றுலா விடுதியொன்றில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் வெடிப்புச் சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
சம்பவத்தில் குறித்த விடுதியின் உரிமையாளர், அவரது மகன் மற்றும் அருகில் உள்ள வீட்டில் இருந்த பெண் ஆகியோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்தவர்கள் மாத்தறை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதேவேளை வெடிப்பு சம்பத்தால் சுற்றுலா விடுதியானது முழுமையாக சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன் விடுதிக்கு அருகிலிருந்த சுமார் ஐந்து வீடுகள் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
என்றபோதும் குறித்த சம்பவத்திற்கான காரணம் தொடர்பில் இதுவரையில் தகவல் வெளியாகவில்லையென தெரிவிக்கப்படுகிறது.