அதிபா் மற்றும் ஆசிரியா்களின் வேதனக்கோாிக்கைக்கு ஆதரவு தொிவித்து பல்கலைக்கழக விாிவுரையாளா்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
கொழும்பு திறந்த பல்கலைக்கழகத்துக்கு முன்னால் இந்தப்போராட்டம் நடத்தப்பட்டது.
அண்மையில் இடம்பெற்ற பசளைக் கொள்ளையில் கோடி 800 ரூபா கொள்ளையிடப்பட்டுள்ளது.
எனினும் ஆசிாியா்கள் கோரும் 38 மில்லியன் ரூபாவை வழங்குவதற்கு அரசாங்கம் பின்னிற்பதாக ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் குறிப்பிட்டனர்.
இந்த ஆா்ப்பாட்டத்தின்போது ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்களுக்கும் காவல்துறை அதிகாாி ஒருவருக்கும் இடையில் முரண்பாட்டு நிலை ஏற்பட்டதையும் காணமுடிந்தது.


















