கிளிநொச்சி மாவட்டத்தில் அண்மைய நாட்களாகப் பெய்து வரும் தொடர் மழை காரணமாக இரணைமடு குளம் உள்ளிட்ட குளங்களின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளது.
இன்று (08) காலை கிடைக்கப் பெற்ற தகவல்களின் படி கிளிநொச்சி மாவட்ட மாவட்டத்தின் கிழக்கு நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பாரிய நீர்ப்பாசன குளமான இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 22 அடி 9 அங்குலமாக உயர்வடைந்துள்ளது.
இதேபோல் கல்மடு குளத்தின் நீர்மட்டம் 18 அடி 4 அங்குலமாகவும் பிரமந்தனாறு குளத்தின் நீர்மட்டம் 07 அடி 04 அங்குலமாகவும் கனகாம்பிகை குளத்தின் நீர்மட்டம் 10 அடி 9 அங்குலம் ஆகும் உயர்வடைந்துள்ளது.
கிளிநொச்சி மேற்கு நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழுள்ள அக்கராயன் குளத்தின் நீர்மட்டம் 16 அடி 9 அங்குலமாகவும், கரியாலை நாகபடுவான் குளத்தின் நீர்மட்டம் 3 அடி11 அங்குலமாகவும், புதுமுறிப்பு குளத்தின் நீர்மட்டம் 16 அடி 01ம்அங்குலமாகவும், குடமுருட்டி குளத்தின் நீர்மட்டம் 6 அடி 4 அங்குலமாகவும், வன்னேரி குளத்தின் நீர்மட்டம் 09 அடி 1 அங்குலமாகவும் உயர்வடைந்துள்ளதாக மாவட்ட நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது