தம்புள்ளை – குருநாகல் பிரதான வீதியில் தலகிரியாகம பஹலவெவ பிரதேசத்தில் இன்று பிற்பகல் பேருந்து ஒன்று வழுக்கி வயலுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் 10 பயணிகள் காயமடைந்து தம்புள்ளை வீர கொப்பேகடுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கதுருவெலயில் இருந்து குருநாகல் நோக்கி பயணித்த பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளானது.
ரயர்கள் பழுதடைந்ததாலும், மழை பெய்ததாலும் பேருந்து வழுக்கி விழுந்திருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
விபத்து தொடர்பான விசாரணைகளை கலேவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


















