டெங்கு வைரஸ் குறித்து நாட்டிலுள்ள பொதுமக்கள் அனைவருக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
டெங்கு தொற்றை கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்கள் போதியளவு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தவறியுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த மாதத்தின் முதல் பத்து நாட்களில் 1361 டெங்கு நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முழுவதிலும் 770 டெங்கு நோயாளர்கள் மட்டுமே பதிவாகியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டில் பெய்து வரும் மழை வெள்ளத்துடனான காலநிலையினால் இந்த ஆபத்து உருவாகியுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் டெங்கு தொற்று பரவும் சாத்தியம் அதிகளவில் காணப்படுவதாக டெங்கு ஒழிப்பு பிரிவின் நிபுணத்துவ மருத்துவர் ஷிலாந்தி செனவிரட்ன தெரிவித்துள்ளார்.
வெள்ளம் வடிந்தோடியதன் பின்னர் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் பொதுமக்களின் பங்களிப்பு திருப்திகரமானதாக இல்லை எனவும் இதன்போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.