நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனையில் தனக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இன்று மாலை வெளியிட்ட டுவிட்டர் பதிவில் அவர் இதனை கூறியுள்ளார். அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.