இலங்கையில் கோவிட் அவதானம் இன்னமும் குறைவடையாத சூழலில் எதிர்க்கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டம் தொடர்பில் வருத்தமடைவதாக விசேட வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான செயற்பாட்டினால் நாட்டை மீண்டும் முடக்குவதற்கான நிலைமை ஏற்படும் எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கோவிட் தொற்று முடிவுக்கு வரவில்லை. இந்த மரணங்கள் சாதாரண மரணங்கள் அல்ல. அங்கு குழந்தைகள், கர்ப்பிணிகள், பெரியவர்கள் உள்ளனர். இந்த உயிர்கள் ஒவ்வொன்றும் குறித்து நாங்கள் அனைவரும் பொறுப்பு கூற வேண்டும் என வைத்தியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதற்கு முன்னர் இந்த நிலைமை குறித்து அனுபவம் உள்ள போதிலும் பாரியளவிலான மக்கள் கொழும்பில் ஒன்றிணைந்தமை தொடர்பில் தாம் வருத்தமடைவதாக பிரதி சுகாதார பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இது ஆர்ப்பாட்டம் செய்வதற்கான நேரம் அல்லது. இந்த ஆர்ப்பாட்டம் ஊடாக கோவிட் பரவலுக்கு அவசியமான சூழலே ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வேலையை செய்யாதீர்கள் என நான் நாட்டு மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன் என விசேட வைத்தியர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.