இலங்கையில் மண்சரிவு ஏற்படும் இடங்களை இலகுவாக அடையாளம் காணக்கூடிய கையடக்க தொலைபேசி செயலியை அறிமுகப்படுத்தும் திட்டமிடப்பட்டுள்ளது.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ஆசிரி கருணாவர்தன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்ட பின்னர், கையடக்க தொலைபேசி செயலி அந்த இடங்களை காண்பிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கும் அந்த பகுதி வழியாக செல்பவர்களுக்கும் இந்த செயலி பயனுள்ளதாக இருக்கும் என பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதம் இந்த கையடக்க தொலைபேசி செயலி அறிமுகப்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.