நாட்டில் வீதி பாதுகாப்பு சட்டத்தைக் கடுமையாக்க பிரித்தானிய அரசு பல கடுமையான சட்டங்களை இயற்றியுள்ளது.
அதன்படி அடுத்தாண்டு முத்தாக வாகன ஓட்டிகள் கையில் தொழில்நுட்ப சாதங்களைக் பயன்படுத்தியவாறு வாகனத்தை செலுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை மீறுபவர்களுக்கு 200 பவுண்டுகள் அபராதமும் ஆறு உரிமப் புள்ளிகளும் விதிக்கப்படும்.
இதுகுறித்து போக்குவரத்து செயலர் கிராண்ட் ஷாப்ஸ் கூறுகையில்,
விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை வழங்குவது எளிதாக இருக்கும். கையில் கையடக்கத் தொலைப் பேசிகள் வைத்திருக்கும் போது அதிகமான இறப்புகள் மற்றும் காயங்கள் ஏற்படுகின்றன.
மேலும் இந்த சட்டத்தை 21ஆம் நூற்றாண்டில் சட்டமாக்குவதை நாங்கள் உறுதி செய்வதாக அவர் தெரிவித்தார்.