சுவிற்சர்லாந்து நாட்டில் வாழும் மக்கள் கோவிட் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள வேண்டுமானால் அவர்களிடம் செல்லுபடியான மருத்துவக் காப்புறுதி பத்திரமும், வதிவிட அனுமதிப்பத்திரமும் இருத்தல் வேண்டும் .
இவை இரண்டும் இல்லாதவர்கள் தடுப்பூசியினைப் பெற்றுக்கொள்ள முடியாது.
பேர்ண் மாவட்டத்தில் பேர்ண் மேற்குப்பகுதியில் இயங்கும் சமூக சேவையாளர் அலுவலகத்திற்கு வெளிநாட்டவர்கள் பலர் (இலங்கை நாட்டு மக்கள் உட்பட) தங்களிடம் செல்லுபடியான வதிவிட அனுமதிப்பத்திரமோ மருத்துவக்காப்புறுதி பத்திரமோ இல்லை என தெரிவித்துள்ளதுடன், தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதற்கு உதவி செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவர்களின் இக் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், மார்கழி மாதம் 2021 முதலாவது தடுப்பூசியும், 2022 தை மாதம் இரண்டாவது தடுப்பூசியும் போடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக சுவிற்சர்லாந்து நாட்டில் ஏதிலியாக (அகதியாக) தஞ்சம் கோரியவர்கள் பலரிடம் இவ்விரு அனுமதிப்பத்திரங்களும் இல்லை.
இவர்கள் அனைவரும் பேர்ண் மேற்குப்பகுதியில் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள முடியும். எந்த மாவட்டத்தில் வாழ்ந்தாலும் இத் தடுப்பூசிகளை பேர்ண் மேற்குப் பகுதியில் பெற்றுக்கொள்ள முடியும்.
பேர்ண் மேற்குப்பகுதியில் சமூக சேவையாளராகக் கடமையாற்றும் இணையரை தொடர்புகளை மேற்கொண்டு உங்கள் வரவுகளைப் பதிவு செய்து கொள்ளவும்.
தொடர்புகளுக்கு: 079 397 38 77
முதலாவது தடுப்பூசி 10.12.2021 – 11.12.2021
இரண்டாவது தடுப்பூசி 07.01.2022 – 08.0120.22
இடம்: Im Quartierzentrum im Tscharnergut, Waldmannstrasse 17a, 3027 Bern.