ஹட்டன் பகுதியில் உள்ள அரச மற்றும் தனியார் வங்கிகளில் பொறுத்தப்பட்டுள்ள காசு பெறும் தன்னியக்க இயந்திரங்கள் மூலம் பல லட்சம் ரூபாய்களை கொள்ளையிடும் கும்பல் ஒன்று தொடர்பாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த கொள்ளை கும்பல் நீண்ட காலமாக மிகவும் சூட்சுமமான முறையில் இயந்திரத்தில் பணம் எடுக்க தெரியாத மற்றும் பணம் எடுக்க தடுமாறும் நபர்களை இலக்காக கொண்டே குறித்த கும்பல் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் இப்பகுதியில் உள்ள தனியார் மற்றும் அரச வங்கிகளில் பல லட்சம் ரூபாய்களை கொள்ளையிட்டு சென்றுள்ளதாகவும் முகாமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.