இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனையடுத்து விநியோகம் குறைந்த நிலையில், கோதுமை மாவின் மொத்த விலை கிலோ ஒன்று 17 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக புறக்கோட்டை வர்த்தகர்கள் அறிவித்துள்ளனர்
இந்தநிலையிலேயே கொத்து ரொட்டி மற்றும் சிற்றுண்டிகளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக சிற்றுண்டி உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இதன்படி கொத்து ரொட்டியின் விலை நாளை முதல் 10 ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளது
அதேநேரம் சிற்றுண்டிகளான ரோல்ஸ், மரக்கறி ரொட்டி மற்றும் முட்டை ரொட்டி ஆகியவற்றின் விலை நாளை முதல் 5 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.
இதற்கிடையில் பாணின் விலை இன்று இரவு முதல் 10 ரூபாவால் அதிகரிக்கப்படுவதாக வெதுப்பக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது
இதேவேளை கோவிட் காரணமாக பல நாடுகளிலும் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுமானால் பொருட்களின் விலை அதிகரிக்கும் என்று அவர் விளக்கமளித்துள்ளார்.