ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை இந்த அரசு உறுதி செய்ய வேண்டும் என்று வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் இன்று அவர் மேலும் தெரிவித்ததாவது,
“முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் பகுதியில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளரான விஸ்வலிங்கம் விஸ்வச்சந்திரன் மீது இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதலை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
இந்தத் தாக்குதலானது தனிநபர் மீதான தாக்குதலாக நாம் பார்க்கவில்லை. ஒட்டுமொத்த ஊடக சுதந்திரத்தின் மீதான தாக்குதலாகவே நாம் இதனைப் பார்க்கின்றோம்.
எனவே, குறித்த ஊடகவியலாளர் மீது தாக்குதலை மேற்கொண்ட இராணுவத்தினர் மீது சம்பந்தப்பட்ட தரப்பினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம்.
இனிமேல் இவ்வாறான சம்பவங்கள் நிகழாமல் பார்த்துக் கொள்வதுடன் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பையும் இந்த அரசு உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம்” என்றார்.