மனித உரிமை ஆணைக்குழுவின் தலையீட்டையடுத்து பருத்தித்துறை பொலிஸ் நிலையத்துக்குள் வைத்து ஊடகவியலாளர் மீது துப்பாக்கியைக் காண்பித்து பொலிஸ் உத்தியோகத்தர் அச்சுறுத்திய விடயம் தொடர்பாக பொலிஸார் முறைப்பாட்டை பெற்றுக்கொண்டுள்ளனர்.
வல்வெட்டித்துறையை சேர்ந்த ஜெயச்சந்திரன் சுலக்சன் என்ற பிராந்திய ஊடகவியலாளரிடமே பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் துப்பாக்கியை காண்பித்து மிரட்டி, அநாகரிகமாகவும் பேசியுள்ளார்.
இந்த சம்பவத்தை இரண்டு பேருக்கும் இடையே இணக்கத்துடன் முடிக்க பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி முயற்சித்த போதும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலையீட்டினால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.