பொலிஸ் குற்றப் பதிவுப் பிரிவின் குற்றப் புலனாய்வுப் பகுப்பாய்வு அலுவலகத்தின் ஓ.ஐ.சி.யாக இருந்த பொலிஸ் பரிசோதகர், எந்தவித அனுமதியுமின்றி சட்டவிரோதமான முறையில் வெளிநாடு சென்றிருந்தார்.
இதனையடுத்து அவர் சேவையில் இருந்து விலகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்தல் விடுத்துள்ளது.
விடுமுறை அனுமதி பெறாமல் நோய்வாய்ப்பட்டதாக பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் குறித்த அதிகாரி வெளிநாடு சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக கடமைக்கு சமூகமளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரில் அவர் சேவையிலிருந்து விலகியுள்ளதாக அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.
கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.