இந்தியாவின் அயோத்தி ராமர் கோயிலை தாக்கப்போவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டமையை அடுத்து அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
உத்தரபிரதேசம் – அயோத்தியில் பிரமாண்டமான அயோத்தி கோயில் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் பொலிஸாருக்கு வந்த அழைப்பு ஒன்றில், ராமர் கோயிலை தாக்கப்போவதாகவும் அயோத்தியில் தொடர் குண்டுகள் வெடிக்கும் என்றும் அச்சுறுத்தியுள்ளார்.
இதனையடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அநேநேரம் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக உள்ளுார் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
ராமர் பிறந்த இடம் என்ற நம்பிக்கையின் காரணமாக, அயோத்தி, இந்துக்களின் ஏழு முக்கியமான புனித யாத்திரை தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
ராமர் பிறந்ததாகக் கூறப்படும் இடத்தில் ஒரு கோயில் இருந்ததாக நம்பப்படுகிறது.
எனினும் அது முகலாய பேரரசர் பாபரின் உத்தரவின் பேரில் இடித்து அதன் இடத்தில் ஒரு மசூதி கட்டப்பட்டதாகவும் இந்துக்கள் நம்புகின்றனர்
இந்தநிலையில் 1992 ஆம் ஆண்டில், அந்த மசூதி இடிக்கப்பட்டது.
இதனையடுத்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை செய்த இந்திய உயர் நீதிமன்றம் அங்கு இந்து கோயில் ஒன்றை நிர்மாணிப்பதற்கு அனுமதியை வழங்கியமை குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து கோயிலை நிர்மாணிக்கும் பணிகள் 2020இல் ஆரம்பமாகின.