மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்து சபை சாலையில் டெங்கு நுளம்பு பரவக்கூடிய நிலையில் அசுத்தமாக வைத்திருந்த குற்றத்துக்காக 25 ஆயிரம் ரூபாவை தண்டப்பணமாக செலுத்துமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் இன்று உத்தரவிட்டு தீர்ப்பளித்துள்ளார்.
குறித்த போக்குவரத்து சாலையை பொது சுகாதார பரிசோதகர்கள் சம்பவதினமான நேற்று புதன்கிழமை (01) முற்றுகையிட்டு சோதனை நடாத்திய போது சாலையின் பகுதியை டெங்கு நுளம்பு பரவக்கூடிய வகையில் தண்ணீர் தேங்கிய நிலையில் அசுத்தமாக வைத்துள்ளனர்.
இதனையடுத்து போக்குவரத்துசாலை முகாமையாளருக்கு எதிராக பொதுச்சுகாதார உத்தியோகத்தர்கள் சுகாதார சட்டத்தின் கீழ் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இன்று வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது நீதவான் சாலை முகாமையாளரை ரூபா 25 ஆயிரம் ரூபாவை தண்டப்பணமாக செலுத்துமாறு உத்தரவிட்டு தீர்ப்பளித்துள்ளார்.