இந்தியாவின் புதுடெல்லியில் அமைந்துள்ள சுலப் அமைப்பினர் நடத்தி வரும் சர்வதேச கழிவறை அருங்காட்சியகத்தை நிதியமைச்சர் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa) நேற்று பார்வையிட்டுள்ளார்.
உலகம் முழுவதும் உள்ள புதுமையான 10 அருங்காட்சியகங்களில் ஒன்றாக டைம்ஸ் சஞ்சிகை இந்த கழிவறை அருங்காட்சியகத்தை பெயரிட்டுள்ளது.
1992 ஆம் ஆண்டு ஸ்டொக்ஹோம் தண்ணீர் விருந்து உட்பட தேசிய மற்றும் சர்வதேச விருதுகளை பெற்ற சுலப் சுகாதார மற்றும் சமூக மறுசீரமைப்பு அமைப்பின் ஸ்தாபகர் கலாநிதி பிந்தேஷ்வர் பதாக் என்பவரால் இந்த அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டது.
கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் இருந்து உலகில் பல்வேறு பிரதேசங்களில் இந்த துறை சம்பந்தமாக எடுக்கப்பட்ட முயற்சிகளை கவனத்தில் கொண்டு நாட்டின் கழிவறை சுகாதார துறையில் காணப்படும் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்ற தேவை கருதி 2009 ஆம் ஆண்டு இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது.