இலங்கை சிங்கள திரைப்படத் துறையின் பொக்ஸ் ஒபீஸ் மன்னன் என வர்ணிக்கப்படும் பிரபல திரைப்பட இயக்குனர் சுனில் சோம பீரிஸ் (Sunil Soma Peiris) மரணமடைந்துள்ளார்.
வீட்டில் காலமான அவருக்கு மரணிக்கும் போது 72 வயது. சுனில் சோம பீரிஸ், 54 திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
ஜய பிட்ட ஜய, திவுரா கியன்னம், ஜய அப்படாய், மமய் ரஜா, ரஜ வெடகாரயோ, யுக்தியட வெட, தினும, ஒபட்டாய் பிரியே ஆதரே போன்ற படங்கள் அவர் இயக்கிய முக்கிய சிங்கள திரைப்படங்களில் சிலவாகும்.
சுனில் சோம பீரிஸ், நடிகராகவும் தயாரிப்பாளராகவும் திரைக்கதை எழுத்தாளராகவும் சிங்கள திரைப்படத் துறைக்கு பங்களிப்பை வழங்கியுள்ளார்.