நாட்டில் நிலவி வரும் டொலர்களுக்கான தட்டுப்பாடு காரணமாக அரசாங்கம் வெளிநாட்டு தூதரகங்கள் சிலவற்றை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
செலவுகளை கட்டுப்படுத்தி அதன் ஊடாக டொலர்களை சேமிப்பதற்காக இவ்வாறு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
நைஜீரியாவிற்கான இலங்கைத் தூதரகம், சைப்பிரஸ் மற்றும் பிராங்புருட் ஆகியனவற்றுக்கான கொன்சோல் காரியாலங்கள் மூடப்பட உள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
பிராங்புருட் கொன்சோல் காரியாலயம் பேர்ளின் நகரிற்கு மாற்றப்படுவதாக அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில் நைஜீரியாவில் பணிகளை முன்னெடுப்பது சிரம்மானது என குறிப்பிட்டுள்ளார். அனைத்து அமைச்சுக்களிலும் இவ்வாறான செலவு குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த வார அமைச்சரவைக் கூட்டத்திலும் அந்நிய செலவாணி கையிருப்பு மற்றும் செலவு குறைப்பு குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.