ஒமிக்ரோன் வகை கோவிட் தொற்று வேகமாக பரவி வருவதால் வெளிநாடுகளுக்கு தேவையில்லாமல் செல்ல வேண்டாம் என கனடா மக்களுக்கு அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவுறுத்தியுள்ளார்.
விடுமுறைக்காலத்தில் வெளிநாடுகளுக்கு செல்லும் திட்டம் இருந்தால் அதனை மாற்றிக்கொள்ளுங்கள்.ஒமிக்ரோன் தொற்று உலகம் முழுவதும் பரவி வருவதால் கனடா மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.
வெளிநாடுகளில் இருந்து திரும்புவோருக்கு பரிசோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை,5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கோவிட் தடுப்பூசி போதிய அளவு இருப்பதாகவும் பெரியவர்களும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.