இலங்கையின் 40 நாடாளுமன்ற உறுப்பினர்களின் நீர்க்கட்டண நிலுவை 10 மில்லியனைக் கடந்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இவ்வாறு நீர்க்கட்டணங்களைச் செலுத்தாத பட்டியலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள்,நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் அடங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இவர்களில் சிலர் நீர் கட்டணங்களை செலுத்தாது நிலுவையில் வைத்துள்ளதாகவும், சுமார்10 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உயிரிழந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
இவ்வாறு அடையாளப்படுத்தப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரின் நீர் கட்டண நிலுவை மாத்திரம் 18 இலட்சம் ரூபாய் எனவும் தகவல் வெளியாகியுள்ளது