தமக்கு அநாமதேய அழைப்பாளர் ஒருவரிடம் இருந்து அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
தமக்கு அச்சுறுத்தல் விடுத்தவர், தமக்கு எதிராக விரைவில் காணொளி காட்சி ஒன்றை வெளியிடவுள்ளதாக குறிப்பிட்டதாக ரணவக்க கூறியுள்ளார்.
தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் தமக்கு எதிரான வழக்கின் சாட்சி என்று தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட, தொலைபேசி அழைப்பாளர், தாமே, ராஜகிரிய விபத்தில் சம்பந்தப்பட்ட சந்தீப் குணவர்த்தனவை, ராஜாங்க அமைச்சர் ஒருவரிடமும், அமைச்சரவை அமைச்சரிடமும் அழைத்துச்சென்றவர் என்று அடையாளப்படுத்தி கொண்டதாக சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இந்த தொலைபேசி அழைப்பு கடந்த செவ்வாய்க்கிழமை முற்பகல் 11 மணியளவில் வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அரசாங்கம் கடும் நிதி நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள நிலையில், தமக்கு எதிரானவர்களை அழிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளின் ஒரு கட்டமே இந்த தொலைபேசி அழைப்பு என்று சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.