வவுனியா அண்ணாநகர் பகுதியில் தொட்டில் கயிறு கழுத்தில் இறுகி நான்கு வயது பெண் குழந்தை உயிரிழந்துள்ளது.
குறித்த சம்பவத்தில் குழந்தை இன்று (18) உயிரிழந்துள்ளது.
குழந்தை தொட்டியில் விளையாடிக்கொண்டிருந்த போது தவறுதலாக அதன் கயிறு கழுத்தில் இறுகியதில் குறித்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.
ஆயினும் குழந்தை உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
மேலும், சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.