சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தும் சமூகவலைத்தளம் WhatsApp.
நாளுக்கு நாள் இதன் பயனாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதால், புதுப்புது அம்சங்கள் அறிமுகமாகிக் கொண்டே வருகின்றன.
இந்நிலையில் உங்களது போனில் இருந்து மற்ற சாதனங்களிலும் WhatsApp-யை பயன்படுத்தமுடியும் என்பதை நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.
QR Codeயை ஸ்கேன் செய்து கொண்டே உங்களது கணனி மற்றும் லேப்டாப்பில் WhatsAppயை பயன்படுத்தலாம்.
ஆனால் தற்போது உங்களது போனில் Onlineல் இல்லாவிட்டாலும் கணனி மற்றும் லேப்டாப்பில் WhatsAppயை பயன்படுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
* இதற்கு முதலில் உங்களது WhatsAppல் இருந்து Join Betaல் சேர்ந்து கொள்ள வேண்டும்.
* இதன்பின்னர், Settings > Linked Devices > Multi-Device Beta கிளிக் செய்த பின்னர், Link a Device என கிளிக் செய்யவும்.
* தொடர்ந்து QR Codeயை ஸ்கேன் செய்த பின்னர் வழக்கம்போல் WhatsAppயை பயன்படுத்தலாம்.
இதன்மூலம் உங்களது போன் Onlineல் இல்லாத போதும் WhatsAppயை பயன்படுத்த முடியும், இந்த வசதி ஐபோனில் வேலை செய்யாது என்பது கூடுதல் தகவல்.



















