யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணனின் வேண்டுகோளுக்கு இணங்க யாழ். நகர் மணிக்கூட்டு கோபுரத்தின் நான்கு பக்க நேரசூசிகள் திருத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில்,மாநகர உறுப்பினர் வ.பார்த்தீபனால் திருத்தம் செய்யும் பணி நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தின் தனித்துவமான அடையாளங்களில் ஒன்றாக பார்க்கப்படும் மணிக்கூட்டுக்கோபுரத்தின் நாத ஒலி யாழ்.நகர் எங்கும் ஒலிக்கும் என யாழ்.மாநகர உறுப்பினர் தெரிவித்துள்ளார்.