பிரதமர் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) வழிபாடுகளில் ஈடுபடுவதற்காக இந்தியாவின் திருப்பதி ஏழுமலை வெங்கடாசலபதி ஆலயத்திற்கு செல்ல உள்ளார்.
எதிர்வரும் 24 ஆம் திகதி இந்தியா செல்லும் பிரதமர் எதிர்வரும் 26 ஆம் திகதி நாடு திரும்ப உள்ளதாக பிரதமரின் அலுவலகத்தின் தகவல்கள் கூறுகின்றன.
பிரதமரின் இந்த விஜயத்திற்கு இந்திய அரசின் முழுமையான அனுசரணை வழங்கப்படுகிறது. பிரதமருடன் அவரது செயலாளர் காமினி செனரத் இந்தியா செல்ல உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
கிரக தோஷத்தை போக்கும் பரிகாரத்திற்காகவே பிரதமர் மகிந்த ராஜபக்ச திருப்பதி திருப்பதி செல்ல உள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.